உலகம்

பனிப்பொழிவில் தவிக்கும் ஆப்கானிஸ்தான்: இதுவரை 42 பேர் பலி

25th Jan 2022 04:52 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் அதீத பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 நாள்களில் மட்டும் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்கள் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளன.

இதையும் படிக்க | அச்சுறுத்தும் ஐஏஎஸ் பணித் திருத்தங்கள்: மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?

வழக்கத்திற்கு மாறான அதீத பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 118 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பனிப்பொழிவால் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் மக்கள் வாகனங்களுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்வு

மேலும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஆப்கனின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உயிர்காக்கும் கருவிகளுக்கான தேவை எழுந்திருப்பதாகவும் 

ADVERTISEMENT
ADVERTISEMENT