உலகம்

நேபாளத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது!

17th Jan 2022 04:36 PM

ADVERTISEMENT

நேபாளத்தில்  முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர்) செலுத்தும் பணி இன்று(திங்கள்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா(ஒமைக்ரான்) பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுப் பரவலைக் குறைக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. 

அதன் ஒருபகுதியாக, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக, முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்தியாவிலும் முன்களப் பணியாளர்களுக்கு, முதியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக அண்டை மாநிலமான நேபாளத்திலும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று(திங்கள்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முன்களப் பணியாளர்களுக்கும் அதன்பின்னர்  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்படும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று அதிகபட்சமாக நேபாளத்தில் 4,961 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT