உலகம்

பிரான்ஸில் ஒமைக்ரானைவிட ஆபத்தான கரோனா வகை கண்டுபிடிப்பு

4th Jan 2022 12:08 PM

ADVERTISEMENT

பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கரோனா வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா வகை ஒமைக்ரானைவிட அதிகளவில் பரவும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை வேகமாக பரவி வரும் நிலையில் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதல்முறையாக உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த மார்சேயில்ஸ் பகுதியை சேர்ந்த 12 பேருக்கு இந்த வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், இந்த உருமாறிய கரோனாவுக்கு ஐஎச்யு பி.1.640.2 வகை என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த வகை கரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பிற நாடுகளில் இந்த வகை கரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT