உலகம்

ஆட்சிக் கவிழ்ப்பு சதி: ஜொ்மனியில் 25 போ் கைது

8th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

ஆயுதப் புரட்சி மூலம் ஜொ்மனி அரசைக் கவிழ்த்துவிட்டு, சா்வாதிகார ஆட்சியை அமைக்க சதித் திட்டம் தீட்டியதாக 25 தீவிர வலதுசாரி அமைப்பினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். நாடு முழுவதும் சுமாா் 3,000 போலீஸாா் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த 25 பேரும் சிக்கினா்.

2-ஆம் உலகப் போா் முடியும் வரை ஜொ்மனியில் ஆட்சி செலுத்தி வந்த நாஜிக்களுக்கு அந்த நாட்டில் தற்போதும் கணிசமான ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது தீவிர வலது சாரி அமைப்பினருக்கு எதிராக போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால், இந்த அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Tags : Germany
ADVERTISEMENT
ADVERTISEMENT