உலகம்

ஆப்பிள் நிறுவனத்துடன் எலான் மஸ்குக்கு என்ன தகராறு?

1st Dec 2022 05:00 PM

ADVERTISEMENT

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் நிறுவனத்தின் புதிய  உரிமையாளர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கை சந்தித்துப் பேசியதாகவும், பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து டுவிட்டரை நீக்க முடிவு செய்திருப்பதாக தன்னை மிரட்டியுள்ளது என்று எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த தகராறை ஆரம்பித்துவைத்திருந்தார்.

இதையும் படிக்க.. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

பல லட்சம் கோடி ரூபாயைக் கொடுத்து தொழிலதிபர் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

ADVERTISEMENT

 

சீரமைப்பு என்ற ஊழியர்களை நீக்குவது, கட்டளைகளைப் பிறப்பிப்பது என காட்டம் காட்ட, ஊழியர்களுக்கும் பதிலுக்கு கூண்டோடு ராஜிநாமா செய்து எலான் மஸ்கை கட்டம் கட்ட ஒரு வழியாக வழிக்கு வந்திருந்தால் எலான் மஸ்க்.

டிவிட்டர் நிறுவனத்துக்குள்ளேயே ஒரு அக்கப்போரை நடத்திக் கொண்டிருந்த எலான் மஸ்குக்கு அது போரடித்துவிட்டதோ என்னவோ, ஆப்பிள் நிறுவனத்தைக் கொஞ்சம் சீண்டிப்பார்த்தார்.

அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் பிரிவின் தலைவர் பில் ஷில்லர், டிவிட்டர் கணக்கை ஆப் ஸ்டோர் நிறுத்தவிருப்பதாக அச்சுறுத்தியிருக்கிறார் என்று மஸ்க் கூறியதோடு, தொடர்ந்து தனது பதிவுகளை ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை தனது டிவிட்டரில் டேக்கும் செய்திருந்தார்.

இதையும் படிக்க.. கடும் விசாரணையிலும் அமைதியாக இருக்க உதவியது எது? அஃப்தாப் வாக்குமூலம்

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரில் சென்று டிம் குக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் எலான் மஸ்க் இன்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். டிவிட்டரை ஆப் ஸ்டோரிலிருந்து நீக்குவது தொடர்பாக இனி ஆப்பிள் சிந்திக்காது என்று டிம் குக் உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிள் தலைமை அலுவலகத்துக்குள் சென்ற விடியோவையும் இணைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT