உலகம்

ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும்; தலிபான்கள்

1st Dec 2022 04:47 PM

ADVERTISEMENT


காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் தலிபான்கள், நாட்டில் போர் காரணமாக நிறுத்தப்பட்ட குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது இந்தியா மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடன் தனது தூதரக உறவை புதுப்பித்துக் கொண்ட இந்தியா, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்துக்கு தொழில்நுட்பக் குழுவை அனுப்பியிருந்தது.

இதையும் படிக்க.. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றமிழைத்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை அல்ல; துறைரீதியான விசாரணை மட்டுமே!

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தானில், இந்தியா செய்து கொண்டிருந்த குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது மீண்டும் தொடங்கும் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க.. கடும் விசாரணையிலும் அமைதியாக இருக்க உதவியது எது? அஃப்தாப் வாக்குமூலம்

இந்த புதிய திட்டங்கள் தொடங்கி முடிக்கப்பட்டால், நாட்டில் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஒழியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT