உலகம்

ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்: திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி

18th Aug 2022 01:40 PM

ADVERTISEMENT

நியூஸிலாந்தில், பழைய பொருள்களை ஏலம்விடும் கடையிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ்களை வாங்கி வந்த குடும்பத்தினர், அதனை வீட்டுக்குக் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது, அதில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சூட்கேஸில் இருந்த பிள்ளைகளின் வயது 5 மற்றும் 10 ஆக இருக்கலாம் என்றும், கடந்த நான்கு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் இந்த சூட்கேஸில் அடைக்கப்பட்டிருக்கலாம் எனறும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிக்க | ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்: திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முதல்நிலையிலேயே இருப்பதாகவும், ஆனால் மிகவும் கொடூரச் சம்பவமாக இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

குழந்தைகள் யார், இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்படி நடந்தது, கொலையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் நடந்த ஏலத்தில், இந்தக் குடும்பத்தினர் இரண்டு சூட்கேஸ்களை வாங்கியதாகவும், அவை கடந்த வாரம் வீட்டுக்கு வந்த போது, திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT