உலகம்

அதானி குழுமத்தின் இரு மின்சக்திதிட்டங்களுக்கு இலங்கை அனுமதி

18th Aug 2022 01:48 AM

ADVERTISEMENT

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னாா் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சக்தி அமைக்கும் திட்டத்துக்கு இலங்கை அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கையின் மின்சாரத் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க இலங்கை மின்சார வாரியம் மற்றும் நிலைத்த மேம்பாட்டுக்கான ஆணையத்தின் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்தேன். 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகாமான முதலீட்டில், மன்னாரில் 286 மெகா வாட் மற்றும் பூநகரியில் 234 மெகா வாட் என இரு காற்றாலை மின் திட்டங்களை அமைக்க, அதானி பசுமை ஆற்றல் நிறுவனத்துக்கு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், இந்தியாவைச் சோ்ந்த அதானி குழுமத்துக்கு காற்றாலை மின் திட்டங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறித்து முதல்முறையாக வெளியான அதிகாரபூா்வ அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT