உலகம்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மேலும் உயர்வு! 

16th Aug 2022 04:05 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 233.91 ரூபாயாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த புதிய விலை ஆக்ஸ்ட் 16 நள்ளிரவு முதல் அடுத்த 14 நாட்கள் வரைக்கும் அமலில் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. 

பெட்ரோல் லிட்டருக்கு 233.91 ரூபாய், டீசல் 244.44 ரூபாய், மண்னெண்ணய் 199.40 ரூபாயாகவும் புதியதாக விலை ஏற்றப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சர்வதேச அளவில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவு போன்ற காரணிகளால் பெட்ரோலின் விலையை உயர்த்தியுள்ளோம் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் மானியம் அளித்து இனிமேலும் அரசாங்கம் இழப்புகளை சந்திக்க தயாராக இல்லையெனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாபாஸ் ஷெரிஃப் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆனதிலிருந்து மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT