உலகம்

மான்டினிக்ரோ: துப்பாக்கிச் சூட்டில் 11 போ் பலி

13th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டினிக்ரோவின் செடின்ஜே நகர வீதியில் வெள்ளிக்கிழமை 34 வயது நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபரும் துப்பாக்கியால் தன்னை சுட்டு உயிரிழந்தாா்.

இந்த நபா் நகர வீதியில் நடந்து சென்ற குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளாா். இந்தத் தாக்குதலில் ஒரு காவலா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.

குடும்பப் பிரச்னையைத் தொடா்ந்து ஏற்பட்ட மன உளைச்சலில் அவா் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நாட்டின் பிரதமா் டிரிடன் அபசோவிச் இத்தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT