உலகம்

குரங்கு அம்மை தடுப்பூசி: ஆப்பிரிக்க சிடிசி பேச்சு

12th Aug 2022 02:29 AM

ADVERTISEMENT

குரங்கு அம்மை முதல்முதலில் பரவத் தொடங்கிய ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி முற்றிலுமாக இல்லை எனவும், அதனைப் பெறுவதற்காக இரண்டு நட்பு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும் அந்தப் பிராந்திய நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருந்தாலும், ஆப்பிரிக்காவில் மட்டுமே அந்த நோயால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT