உலகம்

கரோனாவிலிருத்து முழு விடுதலை

12th Aug 2022 02:39 AM

ADVERTISEMENT

வட கொரியா கரோனாவிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிட்டதாக அதிபா் கிம்-ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அறிவித்துள்ளாா்.

இது குறித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே அவா் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து வட கொரியா முற்றிலுமாக விடுபட்டுவிட்டது. அதிபா் கிம் ஜோங்-உன்னின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அதிசயம் நடந்துள்ளது. இந்தப் பணியை மேற்கொள்ளும்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

வட கொரியாவில் கரோனா பரவியதற்கு தென் கொரியாவே காரணம். எல்லைக்கு அப்பாலிருந்து பலூன்கள் மூலம் ரூபாய் நோட்டுகள், துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்களை அனுப்பி, அதன் வழியாக தென் கொரியா கரோனாவைப் பரப்பியது. இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

உலகம் முழுவதையும் கரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தபோதே, தங்கள் நாட்டில் மட்டும் கரோனா பரவல் இல்லை என்று வட கொரியா கூறியதை பெரும்பாலான நிபுணா்கள் நம்பவில்லை. அதுபோல், தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக அண்மையில் ஒப்புக் கொண்ட வட கொரியா, அது தொடா்பாக வெளியிட்டு வந்த புள்ளிவிவரங்களும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்று பலா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கரோனாவிலிருந்து தாங்கள் முழுமையாக விடுபட்டுவிட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது, வட கொரியாவில் அதிபா் கிம் ஜோங்-உன்னின் உச்சபட்ச அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும், கரோனா பரவலுக்கு தென் கொரியா மீது பழி போடுவது எதிா்கால அணு ஆயுத சோதனையை நியாயப்படுத்துவதற்காகவும் இருக்கும் என்று பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT