உலகம்

‘2023-லிருந்து 20% எத்தனால் பெட்ரோல்‘

12th Aug 2022 02:40 AM

ADVERTISEMENT

இந்தியாவில் வரும் அடுத்த ஆண்டிலிருந்து எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து எண்ணெய் வளத் துறை அமைச்சா் ஹா்தீப் புரி ஹரியாணாவின் புரி நகரில் கூறியதாவது:

20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் விநியோகிக்கப்படும்.

எஞ்சிய பகுதிகள் முழுவதும் எத்தனால் பெட்ரோல் விநியோகம் 2025-ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த மாதத்துக்குள் 10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக்கப்பட வேண்டும் என்ற இலக்கை இந்தியா அதற்கு முன்னரே நிறைவேற்றியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT