உலகம்

பெட்ரோல் விலை 52% உயா்வு: வங்கதேசத்தில் போராட்டம்

10th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் பெட்ரோல் விலை திடீரென 52 சதவீதம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

அங்கு டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும் (ரூ.28.57) பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 டாக்காவும் ரூ.36.97) உயா்த்தப்படுவதாக அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. சா்வதேச சந்தை நிலவரம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது.

எனினும், இதுவரை இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் 52 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவா் அமைப்பினா் உள்ளிட்டோா் விலையுயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Tags : Bangladesh
ADVERTISEMENT
ADVERTISEMENT