உலகம்

உக்ரைன் அணுமின் நிலையம் அருகே ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி

10th Aug 2022 01:06 PM

ADVERTISEMENT

 

ரஷியா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் அருகே உள்ள பகுதியில் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ராணுவ நிர்வாகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில், 

ஜபோரிஜ்ஜியா பகுதி மற்றும் தெற்கு நகரமான நிகோபோல் பகுதியிலும் ரஷிய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த இரு நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களிலும் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

ADVERTISEMENT

படிக்க: பால்டிக் கடலுக்கு அடியில் பேரழிவை ஏற்படுத்தும் 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகளும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ளன. இந்த பகுதிகளில் சமீபத்திய நாள்களில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது. 

இந்த தாக்குதலில் 2 பள்ளிகள், தங்குமிடம் மற்றும் கலாசார மையம் உள்பட 20 மாடிக் கட்டடங்கள் சேதமடைந்தன என்றார். 

தெற்குப் பகுதியில் 20 கி.மீட்டருக்கு அருகில் உள்ள அணுமின் நிலையம் தீப்பிடித்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் ரஷியாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT