உலகம்

வான்வழி தாக்குதலில் 24 ஐஜே தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : இஸ்ரேல் ராணுவம் 

8th Aug 2022 04:38 PM

ADVERTISEMENT

 

இஸ்ரேல் காஸா சண்டையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காஸாவில் ஐஜே அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தளபதி அல்-ஜாபரி, 5 வயது சிறுமி உள்பட 12 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரேலை நோக்கி ஐஜே அமைப்பினா் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். அதற்கு பதிலடியாக, ஐஜே அமைப்பினரின் இலக்குகள் மீது இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் ஐஜே அமைப்பின் மற்றொரு தளபதியும் கொல்லப்பட்டதையடுத்து, பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் வான்வழி தாக்குதல் பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளதாவது: 

ADVERTISEMENT

காஸாவிலிருந்து தீவிரவாதிகள் இதுவரை 1,100 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 200 ரக்கெட்டுகள் காஸா நாட்டிற்குள்ளே விழுந்தது. இதனை பிரீங்கிங் டவுன் என்ற ஆப்ரேஷன் மூலம் சிறப்பாக முறியடித்து வருகின்றோம். 96 சதவிதம் இதில் வெற்றி பெற்றுள்ளோம்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 170 பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கின்றனர். இவர் மேற்கு நாட்டு தீவிரவாதி குழுக்களால் இவர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். 

இந்த வான்வழி தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகளை சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT