உலகம்

ரஷியப் படையினரால் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உக்ரைன் அமைச்சர்

5th Apr 2022 12:38 PM

ADVERTISEMENT

ரஷியப் படையினர் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக உக்ரைன் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக  தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப்படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. 

குறிப்பாக, உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்ற ரஷியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருதால் போரால் பலரும் இயல்பு வாழ்வை இழந்து வருகிறார்கள்.

தலைநகர் கீவ் அருகே புச்சா என்ற பகுதியில் நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட  உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரஷியப்படையினர் செய்தது இனப்படுகொலை என்றும் உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், உக்ரைன் அமைச்சர் லெசியா வாஸிலென்கோ ‘ ரஷியப் படையினர் கொள்ளை, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள். 10 வயது சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளன. ரஷியர்களே இதனைச் செய்தனர். ரஷியத் தாய்களே இவர்களை வளர்த்தனர். ஒரு அறமற்ற தேசம்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT