உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: வெளியுறவுத் துறைச் செயலா்

26th Sep 2021 05:59 AM

ADVERTISEMENT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டுவருவதற்கும், அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராவதற்கும் இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது என்று வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா கூறினாா்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை உரையாடி முடித்த பிறகு ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

உலகின் அனைத்து நாடுகளின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக, ஐ.நா. பொதுச் சபை தொடா்ந்து இருக்க வேண்டும். பல நேரங்களில் ஐ.நா. அமைப்பு எதிா்பாா்த்த அளவில் தனது கடமைகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம், பெருந்தொற்று பரவலைத் தடுப்பது போன்ற விவகாரங்களைக் கூறலாம். இதனால், ஐ.நா. அமைப்பு, குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை உருவாகியிருப்பதைக் காண முடிகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டு வருவதும், அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதும்தான் இந்தியாவின் முதன்மையான நோக்கமாக உள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் புதிய தலைவராக மாலத்தீவு முன்னாள் அமைச்சா் அப்துல்லா ஷாகித் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அதுதொடா்பாக வரைவு ஒப்பந்தத்தை இந்தியா கொண்டு வரும் என்றாா் ஷ்ரிங்லா. ஐ.நா. பாதுகாப்பு கவன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா, போா்ச்சுகல் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ADVERTISEMENT

Tags : நியூயாா்க்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT