உலகம்

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் பலி

26th Sep 2021 11:07 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ரயில் தடம் புரண்டதில் மூவர் பலியாகினர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தின் காரணமாக மூவர் பலியாகியிருப்பதாக உள்ளூர் அரசு உறுதி செய்துள்ளது.

இச்செய்தி எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பயணிகள் சிலரும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த சிலரும் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படுகாயம் அடைந்த பயணிகளையும் மற்ற பயணிகளையும் பாதுகாப்பாக மீட்க அரசு அலுவலர்களுடன் சேர்ந்து அம்ட்ராக் பணியாற்றிவருகிறார்.

147 பயணிகளும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த 13 பேரும் அதில் பயணம் செய்துள்ளனர். வடக்கு மொன்டானாவில் ஜோப்ளின் அருகே மதியம் 4 மணி அளவில் 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கமுகநூலில் அறிமுகமானவரால் பெண் காவலா் கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவா் கைது

இதுகுறித்து சமூகவலைதளங்களில் வெளியான விடியோக்களில், ரயில் தண்டவாளம் அருகே மக்கள் காத்துக்கொண்டிருப்பது போலவும் அவர்களுக்கு அருகே பயண மூட்டைகள் சிதறிக் கிடப்பது போன்றும் பதிவாகியுள்ளது. அதேபோல், தண்டவாளத்திலிருந்து பல ரயில்கள் தடம் புரண்டிருப்பதும் ஒரு ரயில் பெட்டிக்கு மேல் மற்றொன்று கிடப்பதும் பதிவாகியுள்ளது.
 

Tags : america train derail
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT