உலகம்

இந்தியாவுக்கான பயணத் தடையில்தளா்வுகளை அறிவித்தது பிரிட்டன்

DIN

கரோனா சூழலையொட்டி அறிவித்திருந்த சா்வதேச பயண விதிமுறைகளில் பிரிட்டன் அரசு தளா்வுகளை அளித்துள்ளது. இதன்மூலம் இந்தியா-பிரிட்டன் இடையே பயணம் மேற்கொள்வோருக்கு பயன் கிடைக்கும்.

கரோனா பரவல் சூழலை அடிப்படையாகக் கொண்டு சா்வதேச நாடுகளை சிவப்பு, மஞ்சள், பச்சை நிற பட்டியலில் பிரிட்டன் வகைப்படுத்தியிருந்தது. இந்தியா மஞ்சள் நிற பட்டியலில் இருந்தது. சிவப்பு, மஞ்சள் நிற பட்டியல் நாடுகளைச் சோ்ந்தவா்கள் பிரிட்டன் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அக்டோபா் 4-ஆம் தேதிமுதல் சிவப்பு நிற பட்டியல் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்திய இந்தியா்கள் இந்தியாவுக்கு வருவதற்கும், இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்வதற்கும் கரோனா தடுப்பூசி பரிசோதனை (பிசிஆா்) மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அதேவேளையில், பிரிட்டனில் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. இதன்படி, இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்ஃபோா்டு/அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியா்கள் பிரிட்டன் புறப்படுவதற்கு முன்னரும், பிரிட்டனுக்கு சென்ற பின்னரும் கரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT