உலகம்

ஆஸ்திரேலியாவில் பொதுமுடக்கத்தை எதிர்த்த போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

18th Sep 2021 04:25 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராடியவர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

ஆஸ்திரேலியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சிட்னி, மெல்போர்ன், நியூ செளத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க | மன்னிப்புக் கோருகிறோம்: ஆப்கன் ட்ரோன் தாக்குதல் குறித்து அமெரிக்கா

அதனைத் தொடர்ந்து மெல்போர்ன் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெல்போர்னில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் தடுப்புகள் மற்றும்  சோதனைச் சாவடிகள் அமைத்திருந்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | உலகளவில் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு 22.84 கோடியைக் கடந்தது

போராட்டப் பகுதிக்குள் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கரோனா விதிமுறைகளை மீறியதாக தெரிவித்த காவல்துறையினர் பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர்களைக் கலைத்தனர். மேலும் இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Australia lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT