உலகம்

அபுதாபியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு

2nd Sep 2021 05:53 PM

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்க அபுதாபி அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்து பின்பற்றி வருகின்றன. கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், தனிமைப்படுத்துதல், கரோனா பரிசோதனை கட்டாயம் என நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

இதையும் படிக்க | நாட்டில் 54% பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்: மத்திய அரசு

இந்நிலையில் அபுதாபியில் கரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழையும், கரோனா எதிர்மறை சான்றிதழையும் அவசியம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT