உலகம்

டிரோன் தாக்குதலில் அல் கொய்தா முக்கியத் தலைவர் கொலை

23rd Oct 2021 06:26 PM

ADVERTISEMENT

சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாதக் குழுவின் முக்கியத் தலைவர் அப்துல் ஹமீத் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சிரியா மற்றும் இராக் எல்லைப் பகுதிகளுக்கு இடையில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிக்க | மருத்துவமனையில் பிரிட்டன் அரசி

இந்நிலையில் சிரியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர் அப்துல் ஹமீத் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய தலைமையகத்தின் ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளர் ஜான் ரிக்ஸ்பி தெரிவித்ததாவது, “உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் அப்துல் ஹமீத் கொலையால் சீர்குலையும்” என்றார்.

இதையும் படிக்க | ரஷிய வெடிமருந்து ஆலையில் வெடிவிபத்து: 16 போ் பலி

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிரியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது அல் கொய்தா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் யாரும் காயமடையவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT