உலகம்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; அதிரடியான நடவடிக்கைகளை எடுத்த அரசு

21st Oct 2021 04:00 PM

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாகவே, சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. 

நேற்று மட்டும் சிங்கப்பூரில் 3,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். கரோனா பரவ தொடங்கியதிலிருந்து, அங்குப் பதிவு செய்யப்படும் அதிகபட்ச கரோனா உயிரிழப்பு இதுவாகும்.

இந்நிலையில், சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா ஊரடங்கை வரும் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் இயல்பு நிலை திரும்ப அதிக காலம் தேவைப்படுகிறது. 

இதனால் சுகாதார கட்டமைப்பில் உள்ள அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது 

ADVERTISEMENT

'ஜீரோ கரோனா' என்ற திட்டத்தைக் சிங்கப்பூர் அரசு கடந்த ஜூன் மாதம் திரும்பபெற்றுக் கொண்டது. அதற்குப் பதிலாக கரோனாவை  கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசி பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் அங்கு கடுமையான ஊரடங்கு தேவைப்படாத நிலை இருந்தது. 

இதையும் படிக்க | 'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

சிங்கப்பூர் மக்கள்தொகையில் இதுவரை 85% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 49.84% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சமீப காலங்களில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT