உலகம்

நேபாளத்தில் கனமழை பாதிப்பு: பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு

20th Oct 2021 05:01 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் பெய்த திடீர் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் உத்தரகண்ட் மற்றும் நேபாளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | கரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரேசில்; அதிபர் மீது கொலை வழக்கு?

இந்நிலையில் நேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

ADVERTISEMENT

நேபாளத்தில் இதுவரை 48 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் காணாமல் போன 31 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படிக்க | உத்தரகண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல்

மழைவெள்ளத்தால் நேபாளத்தில் வயல்வெளிகள் நீருக்குள் மூழ்கின. இதனால் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள வேளாண் துறை கடுமையான இழப்பை சந்தித்துள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த விளைபொருள்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷேர் பகதூர் தெய்பா மழை வெள்ளம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளைக் குறித்துக் கேட்டறிந்தார்.'

இதையும் படிக்க | அசுர வளர்ச்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்

மழை வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Tags : Nepal Climate change
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT