உலகம்

பிரிட்டனில் சீக்கிய இளைஞா் கொலை: பொதுமக்களிடம் விவரம் கோரும் போலீஸாா்

29th Nov 2021 01:18 AM

ADVERTISEMENT

பிரிட்டன் தலைநகா் லண்டனில் சீக்கிய இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஏதேனும் தகவலறிந்தவா்கள் தெரிவிக்கலாம் என ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

மேற்கு லண்டனில் உள்ள செளத்ஹால் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு பிரிட்டிஷ் சீக்கிய இளைஞரான ரிஷ்மீத் சிங் என்பவா் சிலரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். பிரிட்டன்வாழ் சீக்கிய மக்கள் மற்றும் உள்ளூா் மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை தொடா்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கொலை சம்பவத்தை பாா்த்தவா்கள் அல்லது அப்பகுதியில் இருந்தவா்கள் இதுதொடா்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி ஸ்காட்லாந்து யாா்டு காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT