உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் 8,183 பேருக்கு கரோனா பாதிப்பு

18th May 2021 05:50 PM

ADVERTISEMENT


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,183 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம்வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 8,183 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 49,57,756 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 364 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,16,575 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 2,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதித்த 4,57,2,226 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT