உலகம்

கரோனா தொற்றை தடுக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுகிறோம்: அமெரிக்க அரசு விளக்கம்

DIN


வாஷிங்டன்: கரோனா இரண்டாவது அலை பரவலில் இந்தியாவின் தொடர்ச்சியான, அவசரத் தேவைகளுக்கான உதவிகளை செய்ய அந்நாட்டுடன் அமெரிக்க அரசு நெருங்கி பணியாற்றி வருகிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்  தெரிவித்தார்.
இதுதொடர்பாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்க அரசின் மூலம்  ரூ. 735 கோடி மதிப்பிலும், நாட்டின் தனியார் அமைப்புகள் மூலம் ரூ. 2940 கோடி மதிப்பிலுமாக மொத்தம் ரூ. 4,410 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளை இந்தியாவுக்கு செய்துள்ளோம்.  
தற்போதைய சூழலில் அவசரத் தேவைகள், தொடர்ச்சியான தேவைகளைக் கண்டறிவதற்காக இந்திய அதிகாரிகளுடனும், சுகாதார நிபுணர்களுடனும் அமெரிக்க அரசு நெருங்கி பணியாற்றி என்றார்.  அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 20,000 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள், சுமார் 1500 ஆக்ஸிஜன் உருளைகள், 550 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஒரு மில்லியன் விரைந்து நோயறியும் கருவிகள் உள்ளிட்ட  மருத்துவ பொருள்கள்  கடந்த 6 நாள்களில் 6 சரக்கு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மொபைல் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை உள்நாட்டில் வாங்குவதற்காக "யு.எஸ்.எய்டு' விரைந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
முன்னதாக இந்தியாவின் முன்களப் பணியாளர்களுக்கு உதவ நாங்கள் எங்கள் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மருந்து உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஸ்டின் கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே நாங்கள் இந்தியா பணியாளர்களுடன் தகவல்களை நெருக்கமாகப் பகிர்ந்து  கொண்டிருக்கிறோம் என்றார்.
முன்னதாக அமெரிக்க செனட் சபையின் மூத்த அதிகாரி மார்க் வார்னர் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்துவிடம் கூறுகையில், தற்போது கரோனா பாதிப்பின் உச்சத்தில் இந்தியா உள்ளது. அதிபர் பைடன் நிர்வாகத்தின் முழு ஆதரவும் இந்தியாவுக்கு உண்டு என்று உறுதி அளித்துள்ளார்.  இந்திய தூதர் சாந்துவும் தனது சுட்டுரையில் வார்னருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். செனட் புலனாய்வு குழுவின் தலைவராக வார்னர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கிலீட் சயின்சஸ் நிறுவனத்திடமிருந்து இந்தியாவுக்கு 78,000-க்கும் மேற்பட்ட ரெம்டெசிவிர் டோஸ்கள் நான்காவது தவணையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
இந்தியாவுக்கு இதுவரை 2,61000 டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் டோஸ்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன என இந்திய தூதர் தகவல் தெரிவித்துள்ளார். 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி இது தொர்பாகக் கூறியிருப்பதாவது: தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் நிர்வாகத்துக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT