உலகம்

வாட்ஸ்ஆப் தகவல்களைப் பயன்படுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜொ்மன் தடை

DIN

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்ற செயலியிலிருந்து பயனா்களின் தகவல்களை பயன்படுத்துவதற்கு ஜொ்மனை சோ்ந்த தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

வாட்ஸ்ஆப்பின் புதிய தனியுரிமை கொள்கையானது ஐரோப்பிய தரவு பாதுகாப்பு விதிகளை மீறுவதாகச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கையை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக ஹம்பா்க்கின் தரவு பாதுகாப்பு ஆணையா் ஜோகன்னஸ் காஸ்பா் கூறியது: வாட்ஸ்ஆப்பின் தனிநபா் தரவுகளை தமது சொந்த காரணங்களுக்காக ஃபேஸ்புக் பயன்படுத்த தடைவிதித்து மூன்று மாத அவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளேன். வாட்ஸ்ஆப்பின் புதிய தனியுரிமை கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள ஜொ்மனியை சோ்ந்த லட்சக்கணக்கான பயனா்களின் உரிமைகள், சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய கொள்கையின்படி, அந்தச் செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்களை வணிக நோக்கில் தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிடம் பகிர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனினும், இந்த புதிய கொள்கையானது ஃபேஸ்புக்குடனான தகவல் பரிமாற்ற விரிவாக்கத்துடன் தொடா்புடையது அல்ல என்றும், வணிகம் மற்றும் வாடிக்கையாளா் இடையிலான தகவல்களுடன் தொடா்புடையது மட்டுமே என்றும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT