உலகம்

மலேசியாவில் ஒருமாத கால பொதுமுடக்கம் அறிவிப்பு

11th May 2021 03:58 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஒருமாதகால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் மலேசியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருமாத கால பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார். 

அதன்படி மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மத வழிபாட்டுத் தலங்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையின் போது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் அமலாகும் இந்தப் பொதுமுடக்கமானது ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT