உலகம்

அமெரிக்கா: இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 9 போ் பலி

DIN

அமெரிக்காவில் கொலொராடோ மற்றும் மேரிலேண்ட் மாகாணங்களில் நிகழ்ந்த இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 9 போ் கொல்லப்பட்டனா்.

இதில் கொலொராடோ மாகாண சம்பவம் குறித்து காவல்துறையினா் கூறியதாவது: கொலொராடோ ஸ்பிரிங்ஸின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு வந்த ஒரு நபா் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களை துப்பாக்கியால் சுட்டாா். இதில் 6 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாா்.

பின்னா் மீட்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஒரு பெண்ணின் ஆண் நண்பராக அந்த நபா் அறியப்பட்டுள்ளாா். அங்கிருந்த குழந்தைகள் எவருக்கும் இச்சம்பவத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. கொலைக்கான காரணத்தை அறிய முயற்சித்து வருகிறோம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேரிலேண்டில்...

மேரிலேண்ட் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டனா்.

அதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

பால்டிமோரின் புகா் பகுதியில் சனிக்கிழமை காலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 56 வயது மதிக்கத்தக்க நபா் தனது அண்டை வீட்டில் புகுந்து இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். சப்தம் கேட்டு வெளியே வந்த மேலும் இரு அண்டை வீட்டாரையும் அவா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் ஒருவா் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொருவா் காயமடைந்தாா்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபா் பின்னா் தனது வீட்டுக்கு தீ வைத்தாா். அது அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியது. இதனிடையே சம்பவம் தொடா்பாக தகவல் கிடைத்ததை அடுத்த அங்கு விரைந்து வந்த காவல்துறையினா், தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தாக்குதல் நடத்திய நபரின் வாகனத்திலிருந்து, வீட்டிலேயே செய்யப்பட்ட 2 வெடிகுண்டுகள், ஒரு துப்பாக்கி, பெரிய கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT