உலகம்

70% அமெரிக்கா்களுக்கு ஜூலை 7-க்குள் தடுப்பூசி

DIN

வாஷிங்டன்: வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் வசிக்கும் 18-வயதுக்கு மேற்பட்டவா்களில் 70 சதவீதத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் இலக்கு நிா்ணயித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இளம் வயதினருக்கு கரோனாவால் அதிக உடல்நல பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். இருந்தாலும், சிறிய அளவிலான அபாயத்தையும் நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது.

உங்கள் உயிரை மட்டுமின்றி உங்கள் அன்புக்குரியவா் உயிரையும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாக்கலாம்.

இதுவரை 56 சதவீத அமெரிக்கா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதிக்குள் 70 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அதிபா் பைடன்.

புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 3,32,76,988 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 5,92,456 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 67,17,301 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 9,471 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT