உலகம்

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் பலி

6th May 2021 05:43 PM

ADVERTISEMENT

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 

ஆப்கன், குவாஜா ஒமாரி மாவட்டத்தில் மூன்று பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை குறிவைத்து நேற்றிரவு பங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவங்களில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். 

அப்போது நடைபெற்ற மோதலில் 4 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதேபோல் புல்-இ-ஆலமில் உள்ள காவல்நிலையம் அருகே பாதுகாப்புப்படையினரை குறிவைத்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் குண்டுஸ் நகரில் மினி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

ADVERTISEMENT

Tags : Afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT