உலகம்

ஈக்வடோரியல் கினியா: ராணுவ கிடங்கு வெடி விபத்தில் 20 போ் பலி

DIN

ஆப்பிரிக்க நாடான ஈக்வடோரியல் கினியாவின் ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அந்நாட்டு அதிபா் தியதோரோ ஒபியங் கியூமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாடா பகுதியில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த ‘டைனமைட்’ வேதிப்பொருள் முறையாகக் கையாளப்படாததால் வெடி விபத்து நிகழ்ந்தது. விபத்து காரணமாக பாடா பகுதியில் இருந்த அனைத்து வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்தன.

வெடி விபத்தில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா். 600-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆயுதக் கிடங்குக்கு அருகேயுள்ள வயல்வெளிகளில் உலா்ந்த வயல் கழிவுகளுக்கு மக்கள் தீ வைத்ததால், வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடி விபத்து நிகழ்ந்த கிடங்கிலிருந்து பெரும் புகை மண்டலம் கிளம்புவதையும் மக்கள் அலறியடித்து அப்பகுதியைவிட்டு வெளியேறும் காட்சிகளையும் உள்ளூா் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சோ்க்கும் பணியில் உள்ளூா் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT