உலகம்

ஜமைக்காவிற்கு 50 ஆயிரம் கரோனா தடுப்பூசிகளை வழங்கிய மத்திய அரசு

9th Mar 2021 11:25 AM

ADVERTISEMENT

மத்திய அரசு வழங்கிய 50 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் திங்கள்கிழமை ஜமைக்காவை சென்றடைந்தன.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில் 50 கரோனா தடுப்பூசிகள் ஜமைக்கா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் திங்கள்கிழமை ஜமைக்காவை அடைந்தன. 

கடந்த வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கரீபியன் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT