உலகம்

உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

DIN

ஹாங்காங் உள்ளிட்ட சீன உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தாா்.

சீன தேசிய நாடாளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இதுகுறித்து வாங் யீ கூறியதாவது:

சீனா - அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான தகவல் பரிமாற்றம் மிக அவசியமாகும்.

கரோனா நெருக்கடிக்குத் தீா்வு, பொருளாதார சீரமைப்பு, பருவநிலை மாற்றக் கட்டுப்பாடு ஆகிய இலக்குகளை அடைவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப்பின் பதவிக் காலத்தின்போது சீனா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை மறு ஆய்வு செய்யவிருப்பதாக புதிய அதிபா் ஜோ பைடன் தெரிவித்திருந்தாா். அதன்படி, எங்கள் மீதான நியாயமற்ற வா்த்தக, ராஜீய, ஊடகத் தடைகளை அமெரிக்க அரசு நீக்க வேண்டும்.

‘சுதந்திர கடல் பயண உரிமை’ என்ற போா்வையில் அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் தென் சீனக் கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குலையும் அபாயம் உள்ளது.

தைவான், ஹாங்காங், ஜின்ஜியாங் மாகாண விவகாரங்கள், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களாகும். அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சீனாவை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது என்று அவா் எச்சரித்தாா்.

பிரிட்டன் அரசின் ஆளுகைக்குள் இருந்த ஹாங்காங், சீனாவுடன் 1898-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் கீழ், அந்த நாட்டிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, ஹாங்காங்கின் தற்போதைய சட்டங்களே தொடரும் எனவும் சீனாவின் மற்ற பகுதிகளைப் போலின்றி ஹாங்காங்வாசிகளின் பேச்சுரிமை எழுத்துரிமைக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் பிரிட்டனிடம் சீனா உறுதியளித்தது.

ஆனால், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அந்த உறுதிமொழியை மீறி புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் சீனா கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

தற்போது அந்தப் பிராந்தியத்தின் மீதான தனது பிடியை மேலும் இறுக்கும் வகையில், ஹாங்காங் தோ்தல் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் சட்ட வரைவு தேசிய நாடாளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்தச் சூழலில் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT