உலகம்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்

6th Mar 2021 06:12 PM

ADVERTISEMENT

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.

அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை ஒரு காவலா் உள்பட 54 போ் பலியாகியுள்ளனா்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

Tags : Australia Myanmar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT