உலகம்

ஈரானில் பயணிகள் விமானம் கடத்தும் முயற்சி முறியடிப்பு

6th Mar 2021 11:26 AM

ADVERTISEMENT

 

ஈரானில் பயணிகள் விமானம் கடத்த திட்டமிட்டிருந்த சதியை இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். 

ஈரானில் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபோக்கர் 100 விமானம் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து மஷாத் நோக்கிச் செல்லவிருந்த பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு 10.22 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. 

புறப்பட்டுச் சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கியது. விமானத்தில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இருந்துள்ளார். 

ADVERTISEMENT

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் ஈரான் புரட்சிகர காவல் படைக்குத் தகவல் அளித்ததுடன் விமானம் இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. 

மேலும், அந்த நபரை அதிகாரிகள் விசாரித்தபோது விமானத்தைத் திசைதிருப்பவும், கடத்த முயன்றாகவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். 

Tags : ஈரான் Iran hijack
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT