உலகம்

போலி செய்தி பரப்பியதாக எகிப்து மாணவிக்கு 4 ஆண்டுகள் சிறை

23rd Jun 2021 05:12 PM

ADVERTISEMENT

எகிப்து நாட்டில் போலி செய்தி பரப்பியதாக பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவியாக பயின்று வருபவர் அகமது சமீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது குடும்பத்தினரைக் காண எகிப்து நாட்டிற்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது மற்றும் போலி செய்திகளைப் பரப்பியது உள்ளிட்ட காரணங்களுக்காக எகிப்து காவல்துறை கைது செய்தது. 

அவர் மீதான விசாரணையைத் தொடர்ந்து அவர் எகிப்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமீருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

எனினும் இந்த உத்தரவிற்கு பல்வேறு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிக்கடி சுமத்தப்பட்டு பழிவாங்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags : egypt fake news
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT