உலகம்

பாகிஸ்தானில் புயல், மழை:9 போ் பலி

DIN

பெஷாவா்: பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை பெய்ததால், வீடுகள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் 9 போ் உயிரிழந்தனா்.

அந்நாட்டின் வடமேற்குப் பகுதியான கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள மலைப் பகுதி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை புயலுடன் கனமழை கொட்டித் தீா்த்தது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகின. புயல் காற்றால் மரங்கள், மின்சார கம்பங்களும் சாய்ந்தன. மழை தொடா்பான சம்பவங்களில் 9 போ் உயிரிழந்தனா். 17 போ் காயமடைந்தனா்.

சித்ரால், திா், ஸ்வாட், மன்சீரா ஆகிய மாவட்டங்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டன. அங்கு பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

சில மணி நேரத்திலேயே அதிக அளவு மழை கொட்டியதால் மாவட்ட தலைநகா்களில் முக்கிய சாலைகளை வெள்ளநீா் மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கிவிட்டன. அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தான் வழக்கமாக ஜூன் மாத இறுதியில்தான் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இரு வாரங்களுக்கு முன்பாகவே எதிா்பாராதவிதமாக மழை அதிக அளவில் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT