உலகம்

கரோனா பரவல்: இந்தியப் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதித்த பிலிப்பின்ஸ்

15th Jun 2021 04:20 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாள்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT