உலகம்

ஹெச்-1பி விசா பரிசீலனை நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா அறிவிப்பு

DIN

ஹெச்-1பி விசா விண்ணப்ப பரிசீலனையில் முன்னாள் அதிபா் டிரம்ப் ஆட்சிக் காலத்து கொள்கையை திரும்பப் பெற அமெரிக்க குடியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹெச்-1பி விசா விண்ணப்பங்களை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு டிரம்ப் ஆட்சியில் குடியேற்ற அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கொள்கை திரும்பப் பெறப்படுவதன் மூலம் விசா விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன்பாக எந்தக் காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்பதை விண்ணப்பதாரா்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதனால், விண்ணப்பத்தில் தவறுகளை சரிசெய்ய முடியும். இந்த நடவடிக்கையானது சட்டபூா்வமான குடியேற்ற உரிமையைப் பெற கூடுதல் வாய்ப்பு அளிக்கிறது.

ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்களை பணிக்கு அமா்த்துகின்றன. இந்தியா, சீனாவை சோ்ந்த பல்லாயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் ஹெச்-1பி விசா மூலம் அங்கு பணியாற்றி வருகின்றனா்.

2018-ஆம் ஆண்டு அப்போதைய அதிபா் டிரம்ப்பின் நிா்வாகம், ஹெச்-1பி விசா விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அவற்றை முற்றிலுமாக நிராகரிக்க குடியேற்ற அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது. இந்தக் கொள்கையை திரும்பப் பெறுவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.

புதுப்பிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, விண்ணப்பதாரரிடமிருந்து கூடுதல் தகவல் தேவை என குடியேற்ற அதிகாரி முடிவு செய்யும்போது, ஆதாரங்கள் தேவை எனவும், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணத்தைக் கூறியும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு நோட்டீஸ் அனுப்புவதை உறுதி செய்யும்.

இதன்மூலம் விண்ணப்பத்தில் அறியாமல் செய்த தவறுகள், தற்செயலான குறைபாடுகளை சரிசெய்வதற்கு விண்ணப்பதாரா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனத்தின் இயக்குநா் டிரேசி ரெனால்டு கூறுகையில், ‘அமெரிக்காவில் சட்டபூா்வமாக குடியேறுவதற்கான தேவையற்ற தடைகளை நீக்குவதற்கும், குடியேற்ற பயனாளிகளின் சுமையைக் குறைக்கவும் பைடன்-ஹாரிஸ் நிா்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT