உலகம்

அமெரிக்கா - பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: அதிபா் பைடனுடன் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை

DIN

அமெரிக்காவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே பயண வழித்தடத்தை ஏற்படுத்துவது குறித்து அந்த நாட்டு அதிபா் ஜோ பைடனுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிரிட்டன் வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பயண வழத்தடத்தை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

எனினும், இதுதொடா்பான திட்ட அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்க முடியாது.

எனினும், வழித்தட திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அதிபா் பைடனுக்கும் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும் இடையிலான ஆலோசனையின்போது புரிந்துகொள்ளப்பட்டது என்றாா் அவா்.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

அமெரிக்கா சாா்பில், அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கிறாா். அதற்காக அவா் வியாழக்கிழமை பிரிட்டன் வந்தடைந்தாா். அமெரிக்க அதிபராக அவா் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT