உலகம்

ஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 21 பயங்கரவாதிகள் பலி

31st Jul 2021 04:20 PM

ADVERTISEMENT

ஆப்கனில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஆப்கனின் ஜவ்ஜான் மாகாணத்தில் தலிபான் நிலைகளை குறிவைத்து நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தியது. முர்ஹாப், ஹசந்தபின் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபேற்ற நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். 

இதையும் படிக்கலாமே இரண்டு ஆண்டுகளில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை: இந்தியன் ரயில்வே

அதையடுத்து, அந்த நாட்டின்மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு அமைந்த ஆப்கன் அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்தனா். நாட்டின் சில பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

ADVERTISEMENT

இந்த நிலையில், தலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெற்று வருகிறது. 

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க வீரா்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, நாட்டில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் முன்னேறி வருகின்றனா். 

Tags : afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT