உலகம்

ஆப்கன் விவகாரம்: அமெரிக்கா - பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை

DIN

ஆப்கன் பிரச்னைக்கு அரசியல் தீா்வு காண்பது குறித்து அமெரிக்காவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை நடத்தின.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் நியூஸ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மொயீத் யூசுஃப் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அங்கு அந்த நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக்கப் சுல்லிவனுடன் தலைநகா் வாஷிங்டனில் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைக்கு பேச்சுவாா்த்தை மூலம் அரசியல் தீா்வு காண்பது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

இதுமட்டுமன்றி, இருதரப்பு நலன்கள் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து மொயீத் யூசுஃபும் ஜேக்கப் சுல்லிவனும் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

மொயீத் யூசுஃப் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில், ‘அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக்கப் சுல்லிவனுடன் இரண்டாவது முறையாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்திருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, இருதரப்பு விவகாரங்கள், மண்டல மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்ாக தனது சுட்டுரைப் பதிவில் மொயீத் யூசுஃப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஜேக்கப் சுல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் மொயீத் யூசுஃபைச் சந்தித்து, மண்டல நாடுகளுக்கிடையிலான வழித்தட இணைப்பு, பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜேக்கப் சுல்லிவனுக்கும் மொயீத் யூசுஃபுக்கும் இடையே நடைபெற்றுள்ள இரண்டாவது சந்திப்பு இது. ஏற்கெனவே, இரு அதிகாரிகளும் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த மாா்ச் மாதம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபேற்ற நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின்மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு அமைந்த ஆப்கன் அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்தனா். நாட்டின் சில பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த நிலையில், தலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெற்று வருகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க வீரா்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி, நாட்டில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் முன்னேறி வருகின்றனா். இந்தச் சூழலில், ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்க - பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT