உலகம்

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

30th Jul 2021 04:12 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை  ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  

இதையும் படிக்க | ஆக. 3ல் பாஜக நாடாளுமன்றக்குழுக் கூட்டம்

இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் உலக அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதையும் படிக்க | உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு 

எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

‘ஏா் பபுள்’ விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : COVID19 flights
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT