உலகம்

அமெரிக்கர்களுக்கு அடித்த ஜாக்பாட்: பைடனின் அசத்தல் அறிவிப்பு

30th Jul 2021 01:59 PM

ADVERTISEMENT

ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்டா வகை கரோனா உலகின் பல்வேறு பகுதிகளில் பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் விழிப்புணர்வு மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருபவர்களுக்கு 100 டாலர்கள் வழங்க அந்தந்த மாகாண அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமீப காலத்தில், பலர் பலியாகிவருகின்றனர் அல்லது தங்களின் மனதுக்கு பிடித்தவர்கள் இறப்பதை காண்கின்றனர். பொறுப்பு என்பது தனிமனித சுதந்திரத்துடன்வருவது. எனவே, பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். உங்களின் நாட்டுக்காகவும் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்காகவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

இதையும் படிக்கதெலங்கானா : கார் விபத்தில் 5 பேர் பலி

மொத்தமுள்ள 330 மில்லியன் மக்களில் 163.8 மில்லியன் பேர்தான் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பயணம் செய்யும்போது அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த முன்வருபவர்களுக்கு 100 டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும். இதற்கு, கரோனா உதவி தொகையிலிருந்து 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
 

Tags : biden america vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT