பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி
இந்நிலையில் பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானம்: 4 பேர் பலி
அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த மண்டல அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையை அந்நாட்டின் ரயில்வே துறை அனுப்பியுள்ளது.