உலகம்

பெகாஸஸ் விவகாரம்: இஸ்ரேலுக்கு அழுத்தம் தரும் பிரான்ஸ்

25th Jul 2021 12:01 PM

ADVERTISEMENT


பெகாஸஸ் மென்பொருள் மூலம் மொராக்கோ பாதுகாப்பு படைகள் தன்னை வேவு பார்த்ததாக வெளியான செய்தி குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுன் பேசியுள்ளார்.

பெகாஸஸ் உளவு விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்த பெகாஸஸ் மென்பொருள் மூலம் 50,000 செல்லிடப்பேசிகள் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

குறிப்பாக, பெகாஸஸ் மூலம் மொராக்கோ பாதுகாப்பு படைகள் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வேவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டை ஜூலை 22ஆம் தேதி தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இஸ்ரேல் சேனல் 11 வெளியிட்ட செய்தியில், "இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என மேக்ரான் பென்னட்டிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தான் பதவியேற்பதற்கு முன்பாகவே இருந்துவந்ததாகவும் தற்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என பென்னட் பதிலளித்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெகாஸஸ் விவகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியான நிலையில், ஜூலை 22ஆம் தேதி தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை மேக்ரான் கூட்டினார்.

இதனிடையே, மொராக்கோ பாதுகாப்பு படைகள் மேக்ரானை வேவு பார்த்ததாக வெளியான செய்தியை அந்நாடு மறுத்துள்ளது. அதேபோல், என்எஸ்ஒ நிறுவனமும் இதுகுறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : France Emmanuel Macron Pegasus morocco
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT