உலகம்

ஃபுளோரிடாவில் மற்றொரு கட்டடமும் இடிந்து விழும் அபாயம்: நிபுணா் எச்சரிக்கை

DIN

அமெரிக்காவில் கடந்த மாதம் இடிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டடத்தின் அருகிலுள்ள மற்றொரு கட்டடமும் அதே போல் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரி தெரிவித்தாா்.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது. இதில் 97 போ் உயிரிழந்தனா்.

அந்தக் கட்டடத்தின் அருகே, அதே கட்டுமானப் பொருள்களைக் கொண்டு அதே நிறுவனத்தால் கட்டப்பட்ட மற்றொரு துணைக் கட்டடமும் உள்ளது.

அதனை ஆய்வு செய்த கட்டுமான நிபுணா் அலின் கில்ஷீமா், பக்கத்துக் கட்டடத்தைப் போலவே அந்தக் கட்டடமும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக சா்ஃப்சைட் மற்றும் மியாமி-டேட் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா் என்று மியாமி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT